Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா? - ஸ்ரீரெட்டி அதிர்ச்சி கேள்வி

Advertiesment
என் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா? - ஸ்ரீரெட்டி அதிர்ச்சி கேள்வி
, செவ்வாய், 17 ஜூலை 2018 (12:30 IST)
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

 
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர் சுந்தர். சி. ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ராகவா லாரன்ஸிடம் நான் மட்டும் ஏமாறவில்லை. எனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணும் இதே பிரச்சனையை அவரிடம் சந்தித்துள்ளார். அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எனில், அந்த உண்மையும் வெளியே வரும்” என மிரட்டும் தொனியில் பேசினார்.
webdunia

 
அப்போது அதற்கு என்ன ஆதாரம்? என பேட்டியெடுத்தவர் கேட்க, கடுப்பான ஸ்ரீரெட்டி “ நான் என் அந்தரங்க உறுப்பிலோ இல்லை மார்பிலோ கேமரா வைக்க வேண்டுமா? ஒரு பெண் எப்போதும் கேமராவை ஆன் செய்து வைத்துக்கொண்டே இருப்பாளா? ராகவா லாரன்ஸ் என்னோடு உடல் உறவு வைத்துக்கொண்டிருக்கும் போது நான் செல்பி எடுப்பதை அவர் அனுமதிப்பாரா?” என அவர் அதிர்ச்சி கேள்விகளை எழுப்பினார்.
 
மேலும், நான் இதற்கு முன் பல ஆதரங்களை வெளியிட்டேன். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொந்தளிப்புடன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகவா லாரன்ஸ் என்னை மட்டுமில்லை - பீதி கிளப்பும் ஸ்ரீரெட்டி