Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (14:53 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விஜய் சேதுபதி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளாராம்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த் நடித்துள்ளார். சூதாட்ட புகாரில் சிக்கி தடை செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் அண்மையில் தடை நீக்கப்பட்டார். மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments