Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

vinoth
செவ்வாய், 26 நவம்பர் 2024 (15:15 IST)
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவிலலை என சொல்லப்பட்டது.

படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை இட்லி கடை படத்தைத் தயாரித்து வரும் Dawn pictures நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இவர் விரைவில் வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்