Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

vinoth
செவ்வாய், 26 நவம்பர் 2024 (15:09 IST)
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி புஸ்வானமாகியது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

கங்குவா படத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சமூகவலைதளங்கள் என்றால் அது மிகையாகாது. தமிழ் சினிமாவில் தற்போது முதல் நாள் முதல் காட்சி விமர்சனம் என சொல்லப்படும் பொதுமக்களின் கருத்துகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குகின்றன. அவை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கம் செலுத்துகின்றன. சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவான ‘கங்குவா’ திரைப்படம்  ரிலீஸான போது அதைக் காலி பண்ணியதில் இந்த விமர்சனங்கள் முக்கியப் பங்காற்றின.

இதனால் கங்குவா திரைப்படம் ஓடிடியில் திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவனம் இந்த படத்தை வாங்கியுள்ள நிலையில் இந்தியைத் தவிர்த்து மற்ற மொழிகளில் டிசம்பர் முதல் வாரத்தில் ரிலீஸாகும் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக் சுப்புராஜ் சொன்ன சூப்பர் கதை.. வேண்டாம் என சொல்லி ‘கங்குவா’ குழியில் விழுந்த சூர்யா..!

இந்திய அரசியல் பிரபலத்திற்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்...!

ரிலீஸ் தேதி தாண்டியும் எந்த அப்டேட்டும் இல்லை! ..என்ன ஆச்சு அனுஷ்காவின் ‘காட்டி’ படத்துக்கு?

மணிரத்னமும் ரஹ்மானும் நகைச்சுவை உணர்வு குறைவானவர்கள்… கமல்ஹாசன் கேலி!

நடிகர் விஷ்ணு விஷால்& ஜ்வாலா கட்டா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது!

அடுத்த கட்டுரையில்
Show comments