கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டது.
இந்த தொடர் குறித்து பேசிய நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும் எனக் கூறியுள்ளார். வெளியானதில் இருந்து சுமார் 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்ட சீரிஸாக அமைந்தது.
இப்படிப்பட்ட ஒரு சீரிஸின் பார்ட் 2 எடுத்து கல்லா கட்டாமல் விடுமா நெட்பிளிக்ஸ். இந்நிலையில் இரு ஆண்டுகளாக உருவான ஸ்க்விட் கேம்ஸ் பார்ட் 2 தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது. உலகளவில் அதிகம் பேரால் எதிர்பார்க்கப்பட்ட சீரிஸ்களில் ஒன்றாக ஸ்க்விட் கேம்ஸ் 2 உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.