Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்க்விட் கேம்ஸ் சீசன் 2 ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

vinoth
வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:33 IST)
கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டது.

இந்த தொடர் குறித்து பேசிய நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். வெளியானதில் இருந்து சுமார் 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். ஆங்கில சீரிஸ்களுக்கு இணையாக இதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 25 ஆம் தேதி இந்த தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments