Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவெஞ்சர்ஸ்லாம் ஓரமா போங்க..! – 24 மணி நேரத்தில் ஸ்பைடர்மேன் படைத்த சாதனை!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (14:57 IST)
மார்வெல் ஸ்டியோஸின் புதிய படமான ஸ்பைடர்மேன் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்துள்ளது.

சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள ஹாலிவுட் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். மார்வெலின் ஷாங் ச்சி மற்றும் எட்டர்னல்ஸ் ஆகிய படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

லோகி வெப் சிர்ஸில் மல்டிவெர்ஸ் திறந்ததை தொடர்ந்து ரசிகர்கள் ஸ்பைடர்மேன் படத்தை தீவிரமாக எதிர்பார்த்து வந்தனர். மார்வெல் ஸ்டுடியோஸ் ட்ரெய்லரை தங்களது யூட்யூபில் வெளியிட்டுள்ளனர். திடீரென வெளியான ஸ்பைடர்மேன் ட்ரெய்லர் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக உலகம் முழுவதிலிருந்தும் 355.50 மில்லியன் பார்வைகளை இந்த ட்ரெய்லர் கடந்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக மார்வெலில் வெளியான பல சூப்பர்ஹீரோக்கள் தோன்றிய அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், எண்ட் கேம் படங்களின் ட்ரெய்லர் பார்வை சாதனையை ஸ்பைடர்மேன் ஒற்றை ஆளாய் முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அறிவாளியாக இருந்தால் வெளியே போய்விடுங்கள்… உபேந்திரா படத்தின் ஸ்லைடால் கடுப்பான ரசிகர்கள்!

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

கங்குவா படத்தைக் கட்டம் கட்டி விமர்சித்தது தவறு.. பாக்யராஜ் வேதனை!

திரும்பும் பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரிவ்யூ.. தேசிய விருது உறுதி!? - விடுதலை-2 க்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் லிஸ்ட்டில் இருக்கும் மூன்று இயக்குனர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments