Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது வாரத்தில் நள்ளிரவு சிறப்புக் காட்சி… ராக்கி பாய்க்கு குறையாத மவுஸு!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:17 IST)
கேஜிஎஃப் 2 படத்துக்கு தமிழ்நாட்டில் மூன்றாவது வாரத்தில் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் 134.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் பீஸ்ட் ரிலீஸ் காரணமாக கேஜிஎப் 2 படத்துக்கு படத்துக்கு முதலில் குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டன.

ஆனால் இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பல புறநகர் பகுதிகளில் திரையரங்குகளில் எக்ஸ்ட்ரே சேர் போடப்பட்டோ அல்லது தரையில் உட்கார்ந்தோ ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீப காலத்தில் இதுபோல வேறு எந்த படத்துக்கும் நடந்ததில்லை.

இந்நிலையில் படம் வெளியாகி இரண்டாவது வாரத்தைக் கடந்து மூன்றாவது வாரத்தில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது வாரத்தில் ஒரு படத்துக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுவது ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments