Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி: தமிழக அரசு அனுமதி

Mahendran
புதன், 9 அக்டோபர் 2024 (16:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
 
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், ஓப்பனிங் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
இதன்படி, முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கலாம் என்றும், நள்ளிரவு இரண்டு மணிக்குள் கடைசி காட்சியை முடிக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிடலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற நிலையில், வேட்டையன் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதே நேரத்தில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுவையில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமிதாப் முதல் பென்ச் மாணவன்… ரஜினிகாந்த் கடைசி பென்ச் மாணவன் – இயக்குனர் ஞானவேல்!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தாமதத்துக்கு தனுஷும் ஒரு காரணம?

முள்ளும் மலரும் படத்தின் காளிக்கு நிகரான நடிப்பை வேட்டையனில் கொடுத்துள்ளார்- ரஜினி குறித்து இயக்குனர் ஞானவேல்!

One last dance… தளபதி 69 பாடலில் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பா ரஞ்சித் படத்தில் வில்லனாக இணையும் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments