Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமிதாப் முதல் பென்ச் மாணவன்… ரஜினிகாந்த் கடைசி பென்ச் மாணவன் – இயக்குனர் ஞானவேல்!

vinoth
புதன், 9 அக்டோபர் 2024 (12:41 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளன. படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஞானவேல்  ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதில் “அமிதாப் சார் முதல் பென்ச் மாணவன் மாதிரி. நாளைக்கு என்னக் காட்சிகளை எடுக்கப் போகிறோமோ அதை இன்றே கேட்டு வாங்கிக் கொள்வார். எல்லா வசனங்களையும் படித்துப் பார்த்து வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கேட்பார். ஆனால் ரஜினி சார் கடைசி பென்ச் மாணவன் போல. அன்று எடுக்க வேண்டிய காட்சியின் வசனத்தைக் கொடுத்தால், எடுக்கும் போது பார்த்துக் கொள்ளலாமே என்பார்.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தாமதத்துக்கு தனுஷும் ஒரு காரணம?

முள்ளும் மலரும் படத்தின் காளிக்கு நிகரான நடிப்பை வேட்டையனில் கொடுத்துள்ளார்- ரஜினி குறித்து இயக்குனர் ஞானவேல்!

One last dance… தளபதி 69 பாடலில் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பா ரஞ்சித் படத்தில் வில்லனாக இணையும் ஆர்யா!

நெல்சனுக்காக பிளடி பெக்கர் படத்தை வாங்கிய சன் தொலைக்காட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments