இந்திய சினிமாவில் முன்னணிப் பாடகராகவும், நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் கோலோட்சியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர், 2020ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் கொரோனாவை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பாடல்கள் பாடியிருக்கும் எஸ்பிபி இதுவரை 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எஸ்பிபியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தலைசீவி பூச்சூடி பெண் குழந்தை போன்று அலங்காரம் செய்துக்கொண்டு எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பலர் நிஜமாவே எஸ்பிபியா இது? என ஷாக் ஆகி விட்டனர்.