தென்னிந்திய திரைப்படம் , டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடை பெற்றது.
விழாவினை குஷ்பு சுந்தர் மற்றும் தேவயாணி இருவரும் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தனர். விழாவில் ராமதுரை, ஜே.துரை, தேனப்பன், எம். கபார், நாச்சியப்பன், உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு நினைவுக்கேடயங்கள் வழங்கப்பட்டது. சங்கத்தை பற்றிய 50 வருட நிகழ்வுகள் ஆவணப்படமாக காட்டப்பட்டது.
முல்லை - கோதண்டம் இருவரின் ஓரங்க நாடகம் மூலம் தயாரிப்பு நிர்வாகிகள் பற்றிய வேலை விவரங்கள் நகைச்சுவையாக நடித்துகாட்டப்பட்டது. 50 வருட பொன்விழா நினைவை குறிக்கும் புத்தகத்தை எஸ்.ஆர்.எம். யுனிவர்சிட்டி வேந்தர் பாரிவேந்தர் வெளியிட, , வேல்ஸ் யுனிவர்சிட்டி வேந்தர் ஐசரி கணேஷ் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என். இராமசாமி, துணைத்தலைவர் தமிழ்குமரன், செயலாளர் கதிரேசன், நடப்பு தயாரிப்பு சங்கத்தின் செயல்தலைவர் டி.ஜி. தியாகராஜன், செயலாளர் டி.சிவா, பொருளாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, பெப்சியின் முன்னாள் தலைவர்கள் வி.சி.குகநாதன், பெப்சி விஜயன், நடிகர்கள் விஜய்சேதுபதி, யோகிபாபு, உதயா, இளவரசு, ஜெயப்பிரகாஷ் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி. உதயகுமார், பொருளாளர் போரசு, துணைத்தலைவர் எழில், பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் என். விஜயமுரளி, இணை செயலாளர் வெங்கட் செயற்குழு உறுப்பினர் கிளாமர் சத்யா மற்றும் பெப்சியில் அங்கம் வசிக்கும் 22 யூனியன்களின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
50 வது ஆண்டு நினைவை போற்றும் விதமாக யூனியனின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் நடிகர் விஜய்சேதுபதி நினைவு கேடயங்களை வழங்கினார். தயாரிப்பு நிர்வாகிகள் யூனியன் மற்றும் பெப்சியின் செயலாளருமான பி.என். சுவாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவிற்கு வந்தவர்களை தலைவர் பாலகோபி, பொருளாளர் ராஜ்குமார் மற்றும் துணைத்தலைவர்கள் இணைச்செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.