சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

vinoth
சனி, 19 ஏப்ரல் 2025 (11:22 IST)
முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின. தற்போது அவர் பிரசாந்த் பாண்டியராஜ் இய்ககத்தில் ‘மாமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சூரி விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனரும், செல்ஃபி படத்தின் இயக்குனருமான மதிமாறன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு ‘மண்டாடி’ என்ற வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் கடலில் ஒரு படகு எரிவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் மண்டாடி என்றால் என்ன அர்த்தம் என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி அதுபற்றி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கடலில் மீன் பிடிக்க செல்லும் போது எங்கெங்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து சொல்பவரே மண்டாடியாம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments