Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவுக்கு ஜோடி: கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு! சூரி

Advertiesment
, சனி, 25 மார்ச் 2017 (00:03 IST)
அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கே கால்ஷீட் இல்லை என்று கறாராக கூறிய நயன்தாரா, சூரிக்கு ஜோடிக்கு நடிக்கின்றார் என்று ஒரு யாரோ ஒருவர் புரளியை கிளப்பிவிட, அந்த புரளியை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பல நூற்றுக்கணக்கான இணையதளங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளது.



 



இதுகுறித்து முன்னணி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த சூரி, 'அதை ஏன்ணே கேட்குறீங்க... யாரோ திடீர்ன்னு கொளுத்திப் போட்டுட்டாய்ங்க. அது பாட்டுக்குப் பத்தி எரிஞ்சுக்கிட்டு இருக்கு. முதல்ல அந்த நியூஸைக் கேட்டு நானே ஜெர்க் ஆனேன்தான். ஆனா, ஒரு உண்மையை ஒத்துக்கணும்ண்ணே! இந்தப் புரளியைக் கேட்க கேட்க உள்ளுக்குள்ள ஜிலுஜிலுன்னு ஜாலியா இருந்தாலும் அப்படி ஒரு விஷயத்துல உண்மை இல்லைன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு" என்று கூறியுள்ளார்.

மேலும் கதாநாயகனாக நடிப்பதில்லை என்று கொள்கை அளவில் உறுதியாக இருப்பதாகவும், ஒருவேளை நயன்தாரா என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டால் உடனே என்னுடைய கொள்கையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிடுவேன்' என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் 'பாகுபை 2' ரிலீஸ் ஆகாதா?