Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியின் அடுத்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பு… கவனம் ஈர்க்கும் முதல் லுக் போஸ்டர்!

vinoth
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (13:46 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அதன் பிறகு சூரி, தற்போது பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைக்கருவை சூரி தன்னுடைய சொந்த வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுத்து அதை கதையாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மே 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதற்கிடையில் சூரி விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனரும், செல்ஃபி படத்தின் இயக்குனருமான மதிமாறன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு ‘மண்டாடி’ என்ற வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் கடலில் ஒரு படகு எரிவது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதால் கடலை மையமாகக் கொண்ட கதையாக இருக்குமோ என்ற ஊகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments