சூரியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிமாறனின் இணை இயக்குனர்.. முதல் லுக் ரிலீஸ் அப்டேட்!

vinoth
வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:29 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அதன் பிறகு சூரி, தற்போது பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைக்கருவை சூரி தன்னுடைய சொந்த வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுத்து அதை கதையாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மே 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதற்கிடையில் சூரி விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனரும், செல்ஃபி படத்தின் இயக்குனருமான மதிமாறன் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிவுக்கு வந்தது 'ஹார்ட் பீட் - 2' .. மூன்றாம் பாகம் உண்டா?

பிக் பாஸ் 9: இந்த வாரம் சிறைக்குச் சென்ற போட்டியாளர்கள் யார் யார்?

லோகா ஓடிடி குறித்து அறிவித்த ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

புதுப்பேட்டை 2 பாதி முடிஞ்சது… ஆயிரத்தில் ஒருவன் 2…?- செல்வராகவன் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments