Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் வேகத்தில் முடிந்த சூரியின் அடுத்த பட ஷூட்டிங்… புகைப்படத்தோடு வெளியான அப்டேட்!

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (07:57 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி  அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.. இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக சூரி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய் என தகவல் பரவி, கோலிவுட்டை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சூரி நடித்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து அவரின் மார்க்கெட் இவ்வளவு உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments