நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் எதிர்நீச்சல் திரைப்படம். அந்த படத்தை இயக்கியவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரைசெந்தில்குமார். அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச் சட்டை திரைப்படத்தை இயக்கினார்.
அதன் பிறகு தனுஷை வைத்து கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் அவரின் அடுத்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் அவர் லாரன்ஸ் மற்றும் நயன்தாராவை வைத்து படம் இயக்குவதாக இருந்து எதுவும் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.
இப்போது அவர் சூரி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு கருடன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்குக் கதையையும் இயக்குனர் வெற்றிமாறனே எழுதுவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் இந்த மாதத்தில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.