எகிறும் சூரியின் மண்டாடி பட பட்ஜெட்… காரணம் இதுதானா?

vinoth
சனி, 13 செப்டம்பர் 2025 (09:09 IST)
விடுதலை, கருடன், கொட்டுக்காளி மற்றும் விடுதலை 2 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் சூரி. அவர் நடித்துள்ள  ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து சூரி ‘விடுதலை 1 & 2’ படங்களின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அடுத்து மண்டாடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனரும், செல்ஃபி படத்தின் இயக்குனருமான மதிமாறன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். கடலை சுற்றியக் கதைக்களமாக படம் உருவாகி வருகிறது.

இந்த படத்துக்கான பெரும்பாலானக் காட்சிகளை கடலில் படமாக்கி வருகிறார் இயக்குனர். இதற்காக வெளிநாடுகளில் இருந்து பிரத்யேகமான லென்ஸ்கள் மற்றும் கேமரா உபகரணங்கள் கொண்டு வரவழைக்கப்படுகின்றன. இதனால் படத்தின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments