என் கணவர் ராசியானவர்… விஜய் ஆண்டனி பட விழாவில் பெருமையாகப் பேசிய ஷோபா சந்திரசேகர்!

vinoth
சனி, 13 செப்டம்பர் 2025 (09:03 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவரது சமீபத்தையப் படங்களில் ‘பிச்சைக்காரன் 2’ தவிர வேறு எதுவும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகும் ‘சக்தி திருமகன்’ திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸாகிறது. இது  விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாகும்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நடிகர் விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர்.  அப்போது பேசிய ஷோபா “என் கணவர்தான் சுக்ரன் படம் மூலமாக விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது அவரின் பெயர் வேறு. ஆனால் என் கணவர் அவருக்கு விஜய் ஆண்டனி எனப் பெயரை மாற்றினார். அவர் மிகவும் ராசியானவர். அதனால்தான் விஜய் ஆண்டனி இப்போது நன்றாக இருக்கிறார். அவர் தேர்வு செய்யும் கதைகள் எல்லாம் நன்றாகவும் வித்தியாசமாகவும் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments