Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் அப்பாவின் வாழ்க்கையை வெப் சீரிஸாக எடுக்கும் சூரி… இயக்குனர் இவர்தான்!

vinoth
வெள்ளி, 14 மார்ச் 2025 (12:14 IST)
மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். அந்த படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகே இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தனது அடுத்த படமான 'இராவண கோட்டம்' படத்தை சாந்தணுவை வைத்து இயக்கினார். அந்த படம் பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் விக்ரம் சுகுமாரன் அடுத்த படம் இயக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் சூரியை வைத்து ஒரு வெப் சீரிஸை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடருக்கானக் கருப்பொருளை சூரியே கூறியுள்ளாராம். மேலும் இது அவரது தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சீரிஸை தயாரிக்க தற்போது முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திட்டமிட்ட படி ரிலீஸாகுமா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

கைவிடப்பட்டதா சிபி சக்ரவர்த்தி-நானி இணைய இருந்த படம்?

வெற்றிமாறன் படத்தில் மணிகண்டன்.. ‘வடசென்னை 2’ பற்றி பரவும் வதந்தி!

ராஜமௌலி படத்தில் இணைந்த பிரித்விராஜ்… துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments