மலை போல மாமன் இருக்கேன்… சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!

vinoth
வியாழன், 1 மே 2025 (12:59 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

இதையடுத்து படம் மே 16 ஆம் தேதி ரிலீஸாகிறது. அதையொட்டி படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸாகியுள்ளது. டிரைலரில் சூரிக்கும் அவரது அக்கா மகனுக்கும் இடையிலானப் பாசப் போராட்டமும், அதையொட்டிய உணர்ச்சிப் பூர்வமான டிராமாவுமே கதைக்களமாக இருக்கும் என காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தள்ளிப்போகும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படம்!

ரிலீஸுக்குத் தயாரான கங்கனா- மாதவன் நடிக்கும் தமிழ்ப் படம்!

அடங்காத பார்வதி! ராணுவ ஆட்சியை அமல்படுத்திய ப்ரவீன்! பிக்பாஸ் வீட்டில் ரணகளம்!

சமந்தா நடிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஆபாச தளங்களில் நடிகர் சிரஞ்சீவியின் வீடியோ.. சைபர் க்ரைம் போலீசில் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments