Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எப்போப்பா குட்டி பாப்பா வரும்? சூரியை தொந்தரவு செய்யும் பிள்ளைகள்!

எப்போப்பா குட்டி பாப்பா வரும்? சூரியை தொந்தரவு செய்யும் பிள்ளைகள்!
, வெள்ளி, 4 ஜூன் 2021 (13:36 IST)
தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.
 
பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். 
 
இதற்கிடையில் கொரோன ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது உள்ளிட்டவரை தாண்டி வேலை இழந்து திண்டாடி வந்த திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்து வந்தார்.
 
இந்நிலையில் தற்போது தனது குழந்தைகளுடன் சேர்ந்து அழகிய வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் எப்போப்பா குட்டி பாப்பா வரும்? எப்போப்பா குட்டி பாப்பா வரும்? என தொந்தரவு செய்து பின்னர் அழகிய குட்டி பாப்பா பிறந்துள்ளதை கண்டு பெருமகழ்ச்சி அடைந்தனர் சூரியின் பிள்ளைகள். இதோ அந்த வீடியோ நீங்களும் பாருங்க. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தடை! – நீதிமன்றம் உத்தரவு!