Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரி மற்றும் சிவகார்த்திகேயனுக்குக் கோடி நன்றிகள்… ‘கொட்டுக்காளி’யை பாராட்டிய லெனின் பாரதி!

vinoth
சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:37 IST)
விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான சூரி அதன் பின்னர் நடித்த கருடன் திரைப்படம் கமர்ஷியல் வெற்றியப் பெற்றது. அதையடுத்து இப்போது கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடிக்கிறார்.

படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் சென்று கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குனர் லெனின் பாரதி பாராட்டியுள்ளார்.

அவரது பதிவில் “கொட்டுக்காளி… குடும்பம், மதம், சாதி ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலங்காலமாய் பெண்களின் மீது நிகழ்த்தும் வன்ம, வக்கிரம் ஆகியவைப் பற்றிய பயணம்.  இயக்குனர் வினோத்ராஜ்கு முத்தங்கள்.  இந்த படைப்பைத் தயாரித்த சிவகார்த்திகேயன் மற்றும் அதில் நடித்த சூரி ஆகியோருக்கு கோடி நன்றிகள்” எனப் பாராட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments