என் அப்பா செய்த புண்ணியம்… இளையராஜா குறித்து சூரி நெகிழ்ச்சி பதிவு!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:16 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படத்தில் இடம் பெற்ற 'உன்னோட நடந்தா’ என்ற பாடல் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.  இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் நேற்று வெளியான பாடலை சுகா எழுத, தனுஷ் பாடியுள்ளார். வெளியானதில் இருந்து பாடல் பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதுகுறித்து படத்தின் கதாநாயகன் சூரி “என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் #ViduthalaiPart1” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments