Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபல நடிகை: ‘நன்றி தங்கச்சி’ என கூறிய சூரி!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (18:21 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் பரோட்டா சூரி ஆக மக்களுக்கு அறிமுகமான அவர் அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் 
 
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் வெற்றிமாறன் இயக்கி வரும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் நடிகர் சூரிக்கு பிறந்த நாள் என்பதால் இன்று காலை முதல் பல நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூரி அண்ணா’ என்று தெரிவித்திருந்தார் 
 
இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சூரி ’ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி’ என்று கூறியுள்ளார். நடிகர் சூரி கீர்த்தி சுரேஷை அண்ணா என்று கூறுவதற்கும், சூரி கீர்த்தி சுரேசை தங்கச்சி என்று கூறுவதற்கும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ் அண்ணன் தங்கையாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments