சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த "சூரரைப் போற்று" டீம்!

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (18:12 IST)
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.
 
நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் அடுத்தடுத்து வெளிவந்த இப்படத்தில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 
 
இந்நிலையில் இப்படத்தில் சூர்யா பாடியுள்ள "மாறா" என்ற தீம் பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்து சூர்யா ரசிகர்களை இன்ப மழையில் ஆழ்த்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments