Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Celebrity Bio data : நடிகர் சூர்யா

Celebrity Bio data : நடிகர் சூர்யா
, புதன், 22 ஜனவரி 2020 (15:09 IST)
Real Name : சரவணன் சிவகுமார் 
Nick Name : சூர்யா 
profession:  நடிகர் தயாரிப்பாளர் 
Height: 5 feet 7 inches
weight:  72 kg
date of Birth:  23-7-1975
Age: 44
Place of birth : Chennai Tamil Nadu 
School: பத்ம சேஷாத்ரி பாலா பவன், கோயம்பத்தூர் & செயின்ட் பேட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி,சென்னை.  
 
College: லயோலா கல்லூரி சென்னை. 
 
 
பிறப்பு:  
webdunia
நடிகர் சூர்யா 23-7-1975ம் ஆண்டு சிவகுமார், லட்சுமி தம்பதியினருக்கு மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு கார்த்தி என்ற தம்பியும் பிருந்தா என்ற தங்கையும் இருக்கின்றனர். 
 
பர்சனல் லைஃப்:
webdunia
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது சென்னை நங்கநல்லூரில் வசித்து வருகிறார்.
 
திரைப்பட வாழ்க்கை: 
webdunia
நேருக்கு நேர் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி   காதலே நிம்மதி (1998), சந்திப்போமா (1998),பெரியண்ணா (1999),[7] பூவெல்லாம் கேட்டுப்பார் (1999) , பிதாமகன்( 2001), காக்க காக்க, வாரணம் ஆயிரம் , அயன் , கஜினி இப்படி பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 51 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்தற்காக பரிந்துரை செய்யப்பட்டது. அத்துடன் பேரழகன் படத்திற்காக 52 வது பிலிம்பேர் விருது பெற்றார். நடிப்பில் மட்டுமின்றி இவரது மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் , பசங்க 2 , ஜாக்பாட்,  எனும் திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கினார். 
 
பொதுச்சேவை மற்றும் தொண்டு:
 
பொது நலன் கருதி லாப நோக்கற்ற தொண்டு அகரம் அறக்கட்டளை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுத்து வருகிறது.  
 
அடுத்து வரவிருக்கும் திரைப்படம்:
webdunia
இறுதி சுற்று புகழ் சுதா கொங்காரா இயக்கத்தில் "சூரரை போற்று" படத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது பெற்ற கோலிவுட் நட்சத்திரங்கள்!