Publish Date: Wed, 06 Sep 2017 (17:49 IST)
Updated Date: Wed, 06 Sep 2017 (17:54 IST)
விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், 3 ஹீரோயின்கள் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பொதுவாக, இசை வெளியீட்டு விழாவின்போதே டீஸரையும் வெளியிடுவது பெரும்பாலான படங்களின் வழக்கம். ஆனால், இசை வெளியீட்டு விழா நடந்து பல நாட்கள் ஆகியும், இன்னும் ‘மெர்சல்’ படத்தின் டீஸர் வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் படமே ரிலீஸாகவுள்ள நிலையில், டீஸர், டிரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.