Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதுகவ்வும் 2 படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி!

vinoth
வெள்ளி, 22 மார்ச் 2024 (12:23 IST)
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. டார்க் காமெடி வகையில் சூதுகவ்வும் தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இப்போது 10 வருடங்கள் கழித்து சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் சி வி குமார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கருணாகாரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் டீசரை இன்று மாலை 6.30 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிட உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!

சூர்யாவின் பாலிவுட் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments