Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் அம்மாவை திட்டமிட்டு கொலை செய்துவிட்டார்கள்: சோனாலி போகத் மகள் குற்றச்சாட்டு!

Advertiesment
sonalidaughter
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (21:11 IST)
என் அம்மாவை திட்டமிட்டு கொலை செய்துவிட்டார்கள்: சோனாலி போகத் மகள் குற்றச்சாட்டு!
நடிகை சோனாலி போகத் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவரை திட்டமிட்டு கொலை செய்து விட்டார்கள் என அவரது மகள் குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவாவில் தனது உதவியாளர்களுடன் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள சென்ற நடிகை சோனாலி போகத் மர்மமான முறையில் மரணமடைந்தார் 
 
அவரது மரணம் கொலை என அவரது சகோதரர் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ள நிலையில் தற்போது சோனாலியின் மகளும் புகார் தெரிவித்துள்ளார்
 
கோவாவில் ஒரு வாரம் சூட்டிங் இருக்கும் என்று என் அம்மா சொன்னார் என்றும் ஆனால் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ரிசார்ட் முன்பதிவு செய்யப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் எனவே இது திட்டமிட்ட கொலை என தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்
 
இதுகுறித்து அரியானா காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை