Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வளர்ப்புப் பிராணிகளைக் கைவிடும் உரிமையாளர்கள்! கொதித்தெழுந்த நடிகை!

Advertiesment
வளர்ப்புப் பிராணிகளைக் கைவிடும் உரிமையாளர்கள்! கொதித்தெழுந்த நடிகை!
, திங்கள், 13 ஏப்ரல் 2020 (07:54 IST)
வளர்ப்புப் பிராணிகள் மூலமாக கொரோனா பரவக்கூடும் என்ற வதந்தியை நம்பி பலரும் தங்கள் செல்லப் பிராணிகளைக் கைவிடு முடிவுக்கு சென்றுள்ளனர்.

கொரோனாவால் இதுவரை 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,13,000 ஆக இருக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமே பரவும் என நம்பப்பட்ட இந்த வைரஸ் கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள பூங்காவில் வளர்க்கப்படும் பெண் புலிக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில்’வளர்ப்பு பிராணிகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவலாம்’ என்ற வதந்தி வேகமாகப் பரவியது. இதனால் பலரும் தங்கள் செல்லப் பிராணிகளை கைவிட்டு வருகின்றனர். இதுகுறித்து நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘பலரும் தங்கள் நாய் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை, அவற்றின் மூலம் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் கைவிடுவதாக நான் அறிகிறேன். உங்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் முட்டாள்கள் மற்றும் கைவிடவேண்டியது உங்கள் மனித நேயமற்ற செயலைதான்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னைத் தாக்கியவர்கள் யார்? ஏன் தாக்கினார்கள்? வீடியோ வெளியிட்ட நடிகர்!