அக்‌ஷய் குமாரை கீழே தள்ளிவிட்ட சோனாக்‌ஷி – அதிர்ச்சியடைந்த டாப்ஸி, நித்யா மேனன்

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (18:20 IST)
இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரை நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் “மங்கல்யான்”. செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். இதில் வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்ஹா, டாப்ஸி, நித்யா மேனன் என ஒரு நடிகையர் பட்டாளமே நடித்துள்ளனர்.

படத்தில் நடித்த அனைவரும் படத்தின் விளம்பர வேலைகளை பற்றி கலந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நாற்காலியில் பின்புறமாக சாய்ந்த அக்‌ஷய்குமாரை சோனாக்‌ஷி சின்ஹா நாற்காலியோடு கீழே தள்ளிவிட்டார். திடீரென அக்‌ஷய்குமார் கீழே விழுவதை பார்த்த டாப்ஸி, நித்யாமேனன் இருவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

ஆனால் சோனாக்‌ஷியோ அக்‌ஷய் விழுவதை கண்டு சிரித்து கொண்டிருந்தார். இதை பார்த்தது அக்‌ஷய் குமார் உள்ளிட்ட அனைவரும் சிரிக்க தொடங்கினர். சோனாக்‌ஷியின் இந்த குறும்புதனம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Sona and aki prank #tapseepannu #nithyamenen #sonakshisinha #akshaykumar #vidyabalan #missonmangal #bollywoodactor #bollywoodactress #DilMeinMarsHai #mars #prank

A post shared by Sonakshi Shina (@sonakshiperfect) on

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தமிழில் நிராகரிக்கப்பட்டேன்: இந்தி சினிமா என் வாழ்க்கையை மாற்றியது – வித்யா பாலன்