Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’திரில்லர்’’ படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் மகன்

’’திரில்லர்’’ படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் மகன்
, புதன், 26 மே 2021 (21:27 IST)
பாலிவுட் முன்னணி இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் இளம் நடிகர் துல்கர் சல்மான்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆவார்,

துல்கர் சல்மான் இன்றைய சென்செஷனல் ஹீரோ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். மலையாளம், இந்திய,தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்து, குரூப் சுகுமாரா குரூப் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவர் பிரபல இந்தி பட இயக்குநரும் தயாரிப்பாளருமான பால்கி அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

webdunia

இந்தி சினிமாவில், புகழ்பெற்ற இயக்குநர் பால்கி. இவர்  சீனி கம், பா , ஷமிதாப், கி அண்ட் கா, பேட் மேன், போன்ற படங்களை இயக்கிய்வர் இங்கியரும், இங்கிலீஸ் விங்கிலீஸ், டியர் ஜிந்திகி போன்ற படங்களை தயாரித்தவரும் ஆவார்

இந்நிலையில், பால்கி  இயக்கத்தில்  சல்மான் நடிக்கவுள்ளார். இதுகுறித்து பிரபல ஒளிப்பதிவாலர் பி.சி.ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இப்படம் பிசிக்கல் திரில்லர் படம் என்றும் இதற்காகத்தான் ஆர்வமுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடி ரூபாய் கொடுத்தாலும் அதைச் செய்ய மாட்டேன் – கார்த்தி