Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சில நடிகர்களுக்கு சமூக அக்கறை இல்லை? யாரை சாடுகிறார் பா.ரஞ்சித்

Advertiesment
Some actors
, சனி, 1 டிசம்பர் 2018 (19:48 IST)
அமெரிக்க தூதரகம் மற்றும் நாளந்தா அறக்கட்டளை சார்பில் இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் பா.ரஞ்சித் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கஜா புயலால் மக்கள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே இருக்கிறது. தமிழக அரசு துணை ராணுவத்தை அழைத்து போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதியிலிருந்து நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவி செய்து வருகிறார்கள். சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புது அப்டேட் ...