Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீ இந்திய திணிச்சா அப்படிதான் சொல்லுவோம்… ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குவியும் ஆதரவு!

Advertiesment
hindi theriyathu poda
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:09 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி தெரிந்துகொண்டே இந்தி தெரியாது போடா என்ற டி ஷர்ட்டை அணிந்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பாஜகவுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கும் காண்பிக்கும் வகையில் இந்தி மொழிக்கு எதிராக பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் இளைஞர்கள்,  அரசியல் எதிர்க்கட்சிகள் , நடிகர் நடிகைகள் என பலரும் இந்தி திணிப்பிற்கு எதிராக தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தம்பியுடன் சேர்ந்து " இந்தி தெரியாது போடா என்ற டீ ஷர்ட் அணிந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை இணையவாசிகள் பங்காகமாக கலாய்த்து திட்டி தீர்த்து வருகின்றனர். காரணம்,  கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று இந்தியில் பேசியது தான். இந்த வீடியோ கிளிப்பை தற்ப்போது வெளியிட்டு "எதுக்கு இந்த கேவலமான வேலை? என விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் சமூகவலைதளத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவான கருத்தும் எழுந்துள்ளது. இப்போது உருவாகி இருக்கும் இந்தி தெரியாது போடா என்பது இந்தி திணிப்புக்கு எதிராக உருவாக்கப்பட்டது. அதை ஆதரிக்கும் விதமாகவே அவர் அந்த டி ஷர்ட் அணிந்துள்ளார். நீங்க இந்திய எங்க மேல திணிச்சா அப்படிதான் சொல்வோம் என்றெல்லாம் அவருக்கு ஆதரவானக் கமெண்ட்களும் வர ஆரம்பித்துள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடி மார்க்கெட்டை காலி பண்ணும் முன்னணி நடிகர்கள் – படுதோல்வி அடைந்த படம்!