Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த சினேகன்: வீடியோ

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (09:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் போல் இரண்டாவது பாகத்தில் விறுவிறுப்பு இல்லை என்று நெட்டிசன்களும் ஊடகங்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கும் போரடிக்கும் வகையில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க்காக கொடுத்து வரும் பிக்பாஸ், இந்த வாரம் பிக்பாஸ் பள்ளி என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளார். போட்டியாளர்கள் அனைவரும் மாணவ, மாணவியாக நடிக்கின்றனர். இந்த பள்ளியின் ஆசிரியராக கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை இருந்த சினேகன் வருகிறார். பிக்பாஸ் வீட்டில் திடீரென சினேகன் நுழைந்துள்ளது நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சினேகன் கூறிய அறிவுரை இதுதான்: நீங்கள் எந்த கருத்துவேறுபாடுடன் இருந்தாலும் உணவு சாப்பிடும்போது ஒன்றாக உட்கார்ந்து ஒற்றுமையுடன் சாப்பிடுங்கள்' என்று கூறியுள்ளார். சினேகனின் அறிவுரையை போட்டியாளர்கள் இனி பின்பற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

கிளாமர் உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்!

எனக்கு நடந்த விரும்பத்தகாத சம்பவம்… அழக்கூட முடியவில்லை-தமன்னா சோகம்!

Breakdown இல்லாமல் இன்னொரு ஹாலிவுட் படத்தையும் ஆட்டையப் போட்டாங்களா… ரசிகர்கள் கருத்து!

விடாமுயற்சி படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ இயக்குனர் கொடுத்த ஒரு வரி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments