Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரவுபதியாக நடிக்கும் சினேகா?

திரவுபதியாக நடிக்கும் சினேகா?
, வியாழன், 21 செப்டம்பர் 2017 (17:24 IST)
கன்னடப் படத்தில் திரவுபதியாக நடிக்கிறார் சினேகா என்ற தகவல் கிடைத்துள்ளது.



 
திருமணத்துக்குப் பிறகு, தேர்ந்தெடுத்து ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் சினேகா. ‘உன் சமையல் அறையில்’, ‘ஹரிதாஸ்’ படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை. தற்போது, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அத்துடன், கன்னடத்தில் தயாராகும் ‘குருஷேத்ரா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், அவர் திரவுபதியாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தர்ஷன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ‘உன் சமையல் அறையில்’ படத்துக்குப் பிறகு சினேகா நடிப்பில் வெளியாகும் கன்னடப் படம் இது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலத்தில் கார் மோதி விபத்து… உயிர் தப்பிய ஜெய், பிரேம்ஜி