100 கோடிக்கு மேல் பிசினஸ், 200 கோடியை வசூலிக்கும், ரஜினிக்குப் பிறகு சூர்யாவுக்குதான் அதிக வியாபாரம் என்றெல்லாம் பிரஸ்மீட்டில் அடித்துவிட்டாயிற்று. அதனை செயலில் காட்ட வேண்டாமா? பைரவா வசூலை தோற்கடிப்பது இருக்கட்டும், குறைந்தபட்சம் ரெமோ வசூலையாவது தாண்ட வேண்டுமே.
இதற்காக ரொம்பவும் பிரயத்தனப்பட்டு அதிக திரையரங்குகளை சி 3 படத்துக்காக விளைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிலும் முழுவீச்சில் தியேட்டர் வளைப்பு வேலைகள் நடந்து வருகிறது. கர்நாடகாவில் 170 திரையரங்குகளை குறி வைத்துள்ளனர். ரஜினி படங்களுக்கே அவ்வளவுதான் கிடைக்கும்.
படம் வெளியான 3 நாளில் போட்ட பணத்தை எடுப்பதுதான் திட்டம். நாலாவது நாள் ரசிகன் உஷாராயிட்டா என்னவாவது.