’டான்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:12 IST)
’டான்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் ’டான்’ என்பதும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக எஸ்ஜே சூர்யாவும் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் எஸ்ஜே சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரை படக்குழுவினர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர் 
 
மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ’பூமிநாதன்’ என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வித்தியாசமான வில்லன் கேரக்டர் இது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிசம்பரில் தொடங்கும் தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி திரைப்படம்!

கவின் –ஆண்ட்ரியாவின் ‘மாஸ்க்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான விவரம்!

அடுத்த படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசுகிறாரா ஜேசன் சஞ்சய்?

விஜய்க்கு சொன்ன கதையைதான் ரஜினிக்காக பட்டி டிங்கரிங் பார்க்கிறாரா ஆர் ஜே பாலாஜி?

வாட்ஸ் ஆப்பில் மோசடி… செல்ஃபோன் எண்ணைப் பகிர்ந்த உஷாராக்கிய ஸ்ரேயா!

அடுத்த கட்டுரையில்
Show comments