Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த சிவராஜ் குமார்!

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (09:35 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது,  அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ  தயாரித்து வருகிறார்.

இதையடுத்து அவர் உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக சாய் பல்லவியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த சிவராஜ் குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

நீச்சலுடை புகைப்படங்களை வெளியிட்ட பாபநாசம் புகழ் எஸ்தர் அனில்!

அடுத்த கட்டுரையில்
Show comments