Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
, வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:35 IST)
தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி மழைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ் குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதை இப்போது தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தி, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு இன்னும் ஸ்பெஷலான படம்… ஜிப்ரான் போட்ட மகிழ்ச்சி ட்வீட்!