Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் ஹெச் வினோத் படத்தில் இந்த சூப்பர் ஸ்டார் நடிகரும் இருக்காரா?

கமல் ஹெச் வினோத் படத்தில் இந்த சூப்பர் ஸ்டார் நடிகரும் இருக்காரா?
, திங்கள், 6 நவம்பர் 2023 (07:14 IST)
நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை முடித்துள்ள கமல் அடுத்து கல்கி 2898 படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கும் படத்துக்காக சில பயிற்சிகளை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார் என சொல்லப்பட்டது. அந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதால் இந்த படம் தொடங்குவதில் இன்னும் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ் குமார் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவராஜ் குமார் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறப்புக் காட்சியில் நடித்திருந்ததின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைதானதாக போலி வீடியோ வெளியிட்ட நடிகை.. உண்மையில் கைதாகும் நிலையால் பரபரப்பு..!