Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா சிவராஜ் குமார்?... சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!

vinoth
வியாழன், 5 டிசம்பர் 2024 (11:09 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை.

சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். படத்தில் அவரின் காட்சிகள் ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இதையடுத்து அவரை நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் இப்போது அவர் புற்று நோய் பாதிப்புக் காரணமாக சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் தன்னுடைய உடல்நிலை குறித்து பேசும்போது “எனக்கு ஒரு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதற்கான நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். சிகிச்சை நான்கு கட்டங்களைக் கொண்டது.” எனக் கூறியுள்ளார். வெளிப்படையாக அவர் தனக்குப் புற்றுநோய் என சொல்லவில்லை என்றாலும், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அவங்களுக்கெல்லாம் சயிண்டிஃபிக்கா சண்டை போடத் தெரியாது’… வொர்க் அவுட் ஆனதா மம்மூட்டி & கௌதம் மேனன் காம்போ!

சினிமாவில் இருந்து விலகவில்லை.. தப்பாப் புரிஞ்சுகிட்டீங்க!... பல்டி அடித்த பாலிவுட் நடிகர்!

கே எஸ் ரவிக்குமார் வீட்டில் நடந்த துயரம்… திரையுலகினர் அஞ்சலி!

பிக்பாஸ் வீட்டுக்கு போறதா நெனைச்சுக்கோ..! - சிறை சென்ற மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!

உள்ள விடுறியா? லாரன்ஸ் பிஷ்னோய்கிட்ட சொல்லட்டுமா? - சல்மான்கான் ஷூட்டிங் ஸ்பாட் வந்து மிரட்டிய ஆசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments