Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது சிவகுமாரின் சபதம் டிரைலர்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (18:01 IST)
நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள சிவக்குமாரின் சபதம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்த ஆதியை ஹீரோவாக வைத்து சுந்தர் சி மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தை ஆதியே இயக்கினார். அதையடுத்து அவர் இப்போது அன்பறிவு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பழம்பெரும் நிறுவனமான சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

அதையடுத்து ஆதி நடிக்கும் படத்தையும் அதே நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பாக சிவக்குமாரின் சபதம் என்று பெயர் வைத்துள்ளாராம் ஆதி. ஆதியின் படங்கள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments