Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 வருசம் ஆச்சு, இப்படி ஒரு படம் பார்த்து: அறம் குறித்து சிவகுமார்

Advertiesment
25 வருசம் ஆச்சு, இப்படி ஒரு படம் பார்த்து: அறம் குறித்து சிவகுமார்
, வியாழன், 16 நவம்பர் 2017 (02:57 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபி இயக்கிய 'அறம்' திரைப்படத்திற்கு நாலாபக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து பாராட்டியதும், ஆனந்தவிகடன் 60 மார்க் அள்ளி வழங்கியதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய புரமோஷனாக அமைந்தது.



இந்த நிலையில் பழம்பெரும் நடிகர் சிவகுமார் நேற்று இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கோபி நயினாரை அழைத்து பாராட்டினார். 25 வருசம் ஆச்சு இப்படி ஒரு படம் பார்த்து, அசத்திட்டிங்க' என்று கூறி கோபியின் தோளை தட்டி கொடுத்தார். சிவகுமாரின் இந்த பாராட்டு படக்குழுவினர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

webdunia

 


அதுமட்டுமின்றி இயக்குனர் கோபிக்கு தனது நினைவுப்பரிசாக அவரே வரைந்த மகாத்மா காந்தி ஓவியத்தையும் அளித்தார். உலகெங்கிலும் இருந்தும் இந்த படத்திற்கு குவிந்து வரும் பாராட்டுக்களால் இயக்குனர் கோபியும், நயன்தாராவும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்ன்னு பேரு வச்சவங்க எல்லாம் அப்பாவியா இருப்பாங்க: ராதிகா