Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நந்தன் படத்தைப் பார்த்து அழுதேன்… கைதட்டினேன் –நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

நந்தன் படத்தைப் பார்த்து அழுதேன்… கைதட்டினேன் –நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

vinoth

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (10:50 IST)
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக இருந்த சசிகுமார் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அவர் தேர்வு செய்த கதைகளே காரணம் என சொல்லப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில் அயோத்தி என்ற படத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கைக் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார்.

இதையடுத்து அவர் இப்போது உடன்பிறப்பே இயக்குனர் இரா சரவணன் இயக்கத்தில் ‘நந்தன்’ என்ற அழுத்தமானக் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகிறது. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சக சினிமா கலைஞர்கள் மற்றும் சீமான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் படத்தைப் பார்த்து பாராட்டிப் பேசியிருந்தனர்.

இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் “நந்தன் படத்தைப் பார்த்து நான் சில இடங்களில் சில இடங்களில் அழவும் செய்தேன். கடைசியாக வேகமாக கைதட்டினேன். மிக மிக யதார்த்தமான உண்மைக்கு நெருக்கமான படம்.” எனப் பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கையில் துப்பாக்கி.. வாயில் லாலிபாப்! வார்னரின் மாஸ் எண்ட்ரி! - புஷ்பா 2 ஷூட்டிங் சீனா?