Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

வடிவேலுக்கு போன் போட்ட கதாநாயகர்கள்!

Advertiesment
ஷங்கர்
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (16:51 IST)
நடிகர் வடிவேலு தனது ரி எண்ட்ரியை தொடங்கியுள்ள நிலையில் பல கதாநாயகர்கள் அவரோடு நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்களாம்.

வடிவேலுவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இந்த படத்தில் நடிக்க வடிவேலு தயங்கிய போது அவருக்கு நம்பிக்கை அளித்து நடிக்க வைத்தவர் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப்  படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிய போது மீண்டும் அதே கூட்டணி இணைந்தது.

ஆனால் பட உருவாக்கத்தின் போது ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து அந்த படம் கைவிடப்பட்டது. இதனால் ஷங்கரைப் பற்றி வடிவேலு பல இடங்களில் விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது வடிவேலுவுக்கு போன் போடும் இளம் நடிகர்கள் அவரோடு நடிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்களாம். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவராம். வழக்கமாக தன் படங்களில் சூரி அல்லது சதீஷோடு காமெடி செய்யும் சிவகார்த்திகேயன் ஒரு படத்திலாவது வடிவேலுவோடு நடிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் ஆன அடுத்த கதாநாயகன்!