Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் பொங்கல் ப்ளான் ! – பாண்டிராஜ் & சன்பிகர்ஸ் காம்போ

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (11:44 IST)
சிவகார்த்திகேயனின் 16 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் வேலைக்காரன் , சீமராஜா ஆகிய படங்களின் தோல்வியில் கடன் சுமையால் அவதிப்பட்டு வருகிறார். அதற்காகப் பிற கம்பெனிகளின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அவர் கையில் இப்போது மிஸ்டர் லோகல்,  மிதரன் இயக்கும் படம், ரவிக்குமார் இயக்கும் படம் என 3 படங்கள் உள்ளன. இப்போது புதிதாக மேலும் ஒருப் படமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை இயக்க முதலில் இயக்குனர் சிறுத்தை சிவா ஒப்பந்தமானதாகக் கூறப்பட்ட நிலையில் இப்போது அவருக்குப் பதிலாக இயக்குனர் பாண்டிராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். பாண்டிராஜ் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து மெரினா மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகியப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இடையில் இருவரும் மனவருத்தம் காரணமாக பிரிந்துவிட்டதாகவும் அதனால் இருவரும் சேர்ந்து படம் பண்ணும் வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த மனவருத்தங்களை சன்பிக்சர்ஸ் தீர்த்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வருவதாகவும் இதன் படப்பிடிப்பு இந்தாண்டு பின் பகுதியில் தொடங்க இருப்பதாகவும், படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments