ஆயுதபூஜை, கிறிஸ்துமஸைக் குறிவைத்த சிவகார்த்திகேயன் – அடுத்தடுத்து இரண்டு படங்கள் !

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (08:45 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பாண்டிராஜ் படம் மற்றும் ஹீரோ ஆகிய இரண்டும் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதியப் படத்தின் மூலம் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர். எஸ் கே 16 எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்டவர்கல் நடிக்கின்றனர். இப்படத்துக்கு  எங்க வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்காக விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தாரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தை விரைவாக முடித்து ஆயுதபூஜைக்கு ரிலிஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதேபோல பிஎஸ் மித்ரன் இயக்கும் ஹீரோ படத்திலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கு  மேல் முடிந்துள்ள நிலையில் இதனை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் சிவகார்த்திகேயன் படம் வர இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments